தமிழகத்தின் முக்கிய கிரிக்கெட் தொடரான டி.என்.பி.எல் தொடரின் ஏலம் குறித்த விவரங்கள்..!! உள்ளூர் வீரர்களுக்கு போட்டி..!!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடர் போல தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முக்கிய கிரிக்கெட் தொடர் தான் டி.என்.பி.எல், தமிழக அளவில் திறனுள்ள கிரிக்கெட் வீரர்களை கண்டறிய முக்கிய இந்த தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது, இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் வாங்கும் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் தொடரில் தமிழ்நாட்டின் கிரிக்கெட் பிளேயர்கள் இடம்பெற டி.என்.பி.எல் தொடர் மிகவும் உதவுகிறது என்று கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது, குறிப்பாக
1) சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
2) லைகா கோவை கிங்ஸ்
3) திண்டுக்கல் டிராகன்ஸ்
4) ரூபி திருச்சி வாரியர்ஸ்
5) ஐட்ரீம் திருப்பூர் தமிழர்கள்
6) சீசெம் மதுரை பேந்தர்ஸ்
7) சேலம் ஸ்பார்டன்ஸ்
8) நெல்லை ராயல் கிங்ஸ்
இந்த தொடர் 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண மிகப்பெரிய களமாக அமைந்துள்ளது, இந்த தொடரின் மூலம் தான் தமிழக வீரர் நடராஜன் இந்திய அளவில் தெரிய வந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்று கூறினால் மிகையில்லை.
இன்று (23.02.2023) மதியம் 12 மணியளவில் மகாபலிபுரத்தில் டி.என்.பி.எல் தொடருக்கான ஏலம் தொடங்கியது, இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க மொத்தம் 70 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு அணியும் குறைந்தது 16 முதல் அதிகபட்சம் 20 வீரர்களை ஏலத்தில் வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த சர்வதேச மற்றும் உள்ளூர் வீரர்கள் கலந்து பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தில் முதல் வீரராக இந்திய அணியில் இடம்பெற்று அசத்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழர்கள் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.மேலும் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் முறையே 6.25 லட்சம் மற்றும் 6.75 லட்சம் ரூபாய்க்கு திருச்சி வாரியர்ஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகளால் வாங்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டி.என்.பி.எல் ஏலத்தில் சர்வதேச வீரர்களை விட உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு தான் போட்டி அதிகமாக இருந்த நிலையில், அவர்கள் தான் அதிக விலைக்கு வாங்க பட்டார்கள் என்பது குறிப்பாக தற்போதைய நிலையில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 5 வீரர்கள்
சாய் சுதர்சன் |
21.60 லட்சம் |
லைக்கா கோவை கிங்ஸ் |
சஞ்சய் யாதவ் |
17.60 லட்சம் |
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் |
சோனு யாதவ் |
15.20 லட்சம் |
நெல்லை ராயல் கிங்ஸ் |
சாய் கிஷோர் |
13 லட்சம் |
திருப்பூர் தமிழன்ஸ் |
ஹரிஷ் குமார் |
12.80 லட்சம் |
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் |
அருண் கார்த்திக் |
12 லட்சம் |
நெல்லை ராயல் கிங்ஸ் |