ஒருநாள் தொடரில் மோசமான சாதனையை பதிவு செய்த சூர்யா குமார் யாதவ்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யா குமார் யாதவ் 3 முறை முதல் பந்தில் டக் அவுட் ஆகி சாதனை படைத்துள்ளார் ,மேலும் இந்திய அணியின் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள ஒரு மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்திய அணிக்காக டி20 தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் நம்பர் 1 டி 20 வீரராக முன்னேறி அசத்தியவர் இந்தியாவின் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் சூர்யா குமார் யாதவ், சமீபத்தில் ஒரு நாள் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்த நிலையில் களமிறங்கிய சூர்யா குமார் பல போட்டிகளில் ரன்கள் பெற முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர் சூர்யா குமார் யதாவுக்கு மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது, இந்த தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் தொடர்ந்து சூர்யா குமார் யாதவ் கோல்டன் டக் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளார், மேலும் இதன் மூலம் முக்கிய முன்னாள் ஜாம்பவான்கள் உள்ள பட்டியலில் இணைந்துள்ளார்.
அதாவது ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில்,
1) சச்சின் டெண்டுல்கர் (1994)
2) அனில் கும்ப்ளே (1996)
3) ஜாகீர் கான் (2003-04)
4) இஷாந்த் சர்மா (2010-11)
5) ஜஸ்பிரித் பும்ரா (2017-2019)
ஆகியோர் உள்ள நிலையில் ஆறாவது இந்திய வீரராக சூர்யகுமார் யாதவ் (2023) இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய 3 ஒருநாள் போட்டிகளில் முதல் பந்திலேயே அவுட் (கோல்டன் டக் ) ஆகிய நிலையில், இந்த சாதனை படைக்கும் வீரர் முதல் இந்திய வீரர் ஆகிறார் சூர்யா குமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் ஒருநாள் தொடரில் சூரியகுமார் உடைய எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது, மேலும் பல தரப்பில் இருந்து சூர்யா குமார் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் சிறந்த திறனுள்ள வீரர் என்பதால் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூர்யா குமார் யாதவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் இந்திய அணிக்காக சிறந்த ஒருநாள் தொடர் வீரராக சூர்யா குமார் யாதவ் கட்டாயம் இருப்பார் என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.