சச்சின் சாதனையை விராட் கோலி கண்டிப்பாக முறியடிப்பார்…!! ரெய்னா நம்பிக்கை…!!

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கும் விராட் கோலி சமீபத்தில் நடந்த போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது தனது சிறந்த பார்மில் உள்ளார், இந்நிலையில் விரைவில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடைய இமாலய சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர் விராட் கோலி சதம் அடித்தார், இதன் மூலம் சர்வதேச அளவில் தனது 75 வது சதத்தை பதிவு செய்து கோலி அசத்தினார். இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான் சர்வதேச அளவில் 100 சதங்கள் பதிவு செய்துள்ளார், மேலும் இந்த பட்டியலில் 75 சதங்களுடன் விராட் கோலி 2 வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசிய முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா விராட் கோலி உடைய பார்ம் பற்றி பேசினார், அதாவது விராட் கோலி சமீபத்தில் தான் தனது 75 வது சதத்தை பதிவு செய்தார். மேலும் தனது சிறந்த பார்மில் உள்ள விராட் கோலி அடுத்து இந்திய அணி விளையாட உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை தொடர்களில் முக்கிய வீரராக திகழ்வார் என்று கூறினார்.
இதனை அடுத்து பேசிய சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உடைய 100 சதங்கள் சாதனை மிரட்டல் பார்மில் உள்ள விராட் கோலி காட்டாயமாக முறியடிப்பார் என்று கூறினார்.தற்போதைய நிலையில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், முன்னணி வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றால் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் ஒருநாள் தொடர் சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது தங்களின் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 153 போட்டிகளில் 5406 ரன்கள் பெற்று 2 வது இடத்தில் உள்ளார் , விராட் கோலி 103 போட்டிகளில் 5362 ரன்கள் பெற்று 3 வது இடத்தில் உள்ளார் எனவே விரைவில் பாண்டிங் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.