வெற்றியே பெறாத ஹைதராபாத்.. வேட்டையாடும் மோடில் பஞ்சாப்.. இரு அணிகளின் போட்டி குறித்த முழு விவரம்.. | IPL 2023 PBKS vs SRH Preview

ஐபிஎல் 2023 தொடரின் 14வது லீக் போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, ட்ரீம் லெவன் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
போட்டி குறித்த விவரம் :
14 வது லீக் போட்டி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & ஞாயிற்றுக்கிழமை
தேதி : 9 ஏப்ரல் 2023
மைதானம் : ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்.
பிட்ச் அறிக்கை :
பேட்டிங்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் இதுவரை 2 போட்டிகள் நடந்துள்ளன. அந்த போட்டிகளில், முதலில் பந்துவீசிய அணி 2 வெற்றி பெற்றுள்ளது, முதலில் பேட்டிங் செய்யும் அணி 2 தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 196.
எனவே, இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இதனால், சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும், பஞ்சாப் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும் களமிறங்கும். எனவே இரு அணிகளுக்கும் வெற்றிக்கான வாய்ப்பு சம அளவில் உள்ளது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன்/துணை கேப்டன் - ஷிகர் தவான், ஐடன் மார்க்ரம், பிரப்சிம்ரன் சிங்
விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங்
பேட்ஸ்மேன் – ஷிகர் தவான், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி
ஆல்ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா
பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அடில் ரஷித், நாதன் எல்லிஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் (தோராயமாக) : மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி புரூக்/ ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித்.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமாக) : ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் கரண், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ்/காகிசோ ரபாடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.