ஐபிஎல் 2023 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கலக்கல் ஜெர்சி வெளியானது..!!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பம் ஆகா உள்ள நிலையில், இந்த தொடரில் முக்கிய அணிக்காக விளங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய ஜெர்சி உடன் களமிறங்க உள்ளது.
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு ஆர்மி என்று அழைக்கப்படும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2023 ஆம் ஆண்டில் சற்று மாறுபட்ட புதிய பொலிவுடன் அமைந்துள்ள ஜெர்சியுடன் களமிறங்கி அசத்த உள்ளது, இந்த புதிய ஜெர்சியை அணியின் இளம் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், மயங்க அகர்வால் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் அணிந்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய விதத்தில் காணொளி மூலம் தங்களின் ட்விட்டர் இணையதள பக்கத்தில் புதிய ஜெர்சியை பதிவிட்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் தங்கள் புதிய ஜெர்சியில் பாரம்பரிய ஆரஞ்சு நிறத்தில் காலர் மற்றும் கையின் வடிவமைப்பில் மட்டும் சிறிது மாறுபாடுகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2023 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி புதிய கேப்டன் ஐடன் மார்க்ராம் தலைமையில் களமிறங்க உள்ளது, மேலும் ஐபிஎல் 2023 தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி : அப்துல் சமத், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், ஐடன் மார்க்ராம்(கேப்டன்), மார்கோ ஜான்சன், க்ளென் பிலிப்ஸ், ஃபசல் ஹாக் பாரூக், ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் மார்கண்டே, விக்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ், சன்வீர் சிங், உபேந்திர சிங் யாதவ், மயங்க் டாகர், நிதிஷ் குமார் ரெட்டி, அகேல் ஹொசைன், அன்மோல்பிரீத் சிங்.