ஐபிஎல் 2023 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக வெளிநாட்டு வீரர் ஒருவரை நியமித்துள்ளது அணி நிர்வாகம், சரியான தேர்வு என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் முக்கியமான அணியாக விளங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக தென்னாபிரிக்கா வீரர் ஐடன் மார்க்ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை வழி நடத்திய கேன் வில்லியம்சன் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், புதிய கேப்டனை எப்போது அணி நிர்வாகம் அறிவிக்கும் என்று அனைவரும் எதிர்பாராத நிலையில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஐடன் மார்க்ராம் வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தலைமை தாங்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு பணிபுரிந்த மயங்க அகர்வாலை ஏலத்தில் ஹைதராபாத் அணி எடுத்த நிலையில், ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக அணி நிர்வாகம் ஐடன் மார்க்ராமை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த எஸ்.ஏ டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை ஐடன் மார்க்ராம் வழி நடத்தியதை தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை வழிநடத்த கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர்கள் தங்கள் புதிய கேப்டனாக ஐடன் மார்க்ராம் அறிவிப்பை தொடர்ந்து, இந்த முறை புதிய தலைமையில் ஹைதராபாத் அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று இணையத்தில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.