IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் கோலியின் அதிரடியை பார்ப்பீர்கள் கவாஸ்கர் கருத்து..!! ஆஸ்திரேலியா அணிக்கு எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது, இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடிப்பார் என்று இந்தியாவின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 132 ரன்களில் வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது, ஆனால் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி எதிர்பாராத நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இளம் ஸ்பின்னர் டாட் மர்பி இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து விரைவாக பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில் இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் கோலியின் சொந்த ஊரான டெல்லியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது, எனவே சிறந்த பார்மில் இருக்கும் விராட் கோலி நீண்ட நாட்களாக காத்திருப்பில் உள்ள தனது 28 வது டெஸ்ட் சதத்தை இந்த போட்டியில் பதிவு செய்வார் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் தனது பழைய பார்முக்கு திரும்பிய விராட் கோலி இதுவரை சர்வதேச அளவில் 4 சதங்கள் அடித்துள்ளார்,கடைசியாக 2019 ஆம் ஆண்டு கோலி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிலையில் தனது நீண்ட நாள் டெஸ்ட் சதம் காத்திருப்பிற்கு இந்த போட்டியில் முற்றுப்புள்ளி வைப்பார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த முறை 2017 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 243 பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவின் மூலம் சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலியா அணிக்கு விராட் கோலியின் ஆட்டம் குறித்து எச்சரிக்கையை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, மேலும் இரு அணி வீரர்களும் 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.