IND VS AUS TEST 2023 : முதல் இந்தியராக செதேஷ்வர் புஜாரா புதிய சாதனை படைக்க வேண்டும்..!! சுனில் கவாஸ்கர் வாழ்த்து..!!

பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (பிப்ரவரி 17) விளையாட தொடங்கினார்கள். அதற்கு முன் இந்திய அணிக்காக 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள புஜாராவுக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் புதிய சாதனை படைக்க வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் நம்பர் 3 இடத்தில் ராகுல் டிராவிட் பிறகு புஜாரா தான் சிறப்பாக விளையாடி வருகிறார், டிராவிட் பிறகு இந்திய அணியின் தூணாக டெஸ்ட் போட்டியில் புஜாரா விளங்குகிறார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி புஜாராவின் 100வது டெஸ்ட் போட்டியாக அமைத்துள்ளது.
இந்நிலையில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் வீரர்கள் புஜாராவுக்கு “கார்டு ஆப் ஹானர்” மரியாதை வழங்கினார், அதன் பின் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் செதேஷ்வர் புஜாராவுக்கு 100வது டெஸ்ட் கான சிறப்பு தொப்பியை வழங்கி கௌரவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 100வது டெஸ்ட் போட்டி கிளுப்புக்கு வரவேற்கிறேன் என்று கூறினார். இந்திய அணிக்காக இதுவரை சுனில் கவாஸ்கர் உட்பட 12 வீரர்கள் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார்கள், இன்று 13 வது வீரராக செதேஷ்வர் புஜாரா அந்த சாதனை பட்டியலில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் செதேஷ்வர் புஜாரா படைத்த சாதனைகளை பெற்று தந்த வெற்றிகள் என அனைத்தும் பற்றி பேசினார், இறுதியாக முதல் இந்தியராக 100வது டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை ஓன்றை புஜாரா படைக்க வேண்டும் என்று தான் வேண்டி கொள்வதாக கூறினார்.
இதுவரை இந்திய அணிக்காக 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்கள் ஒருவர் கூட அந்த போட்டியில் சதம் அடிக்க வில்லை , எனவே புஜாரா முதல் இந்தியராக சதம் அடித்து சாதனை படைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.