இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த சுனில் காவஸ்கர்…!!

இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த கூடிய புதிய கேப்டன் குறித்து முக்கிய தகவலை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதுவும் உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டன் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்று 2-1 நிலையில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது, அடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்க உள்ளது.இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளார்.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் காவஸ்கர் இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து சில தகவல்களை பகிர்ந்தார், அதில் இந்திய அணியை டி 20 தொடர்களில் வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியா விரைவில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்பார் என்று கூறினார்.
அதன்பின் தொடர்ந்து பேசிய கவாஸ்கர் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு ஹர்திக் பாண்டியாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்று கூறினார், குறிப்பாக ஐபிஎல் தொடரில் பங்கேற்ற போது குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா சரியான தருணத்தில் களத்தில் இறங்கி பேட்டிங் செய்து அணிக்கு உதவினார், மேலும் அணிக்காக தானே களத்தில் இறங்கி பொறுப்புடன் முன் நின்று முக்கிய வழிநடத்துகிறார்.
ஹர்திக் பாண்டியா தனது அணியின் வீரர்களுக்கு தேவையான நேரத்தில் வாய்ப்புகளை வழங்கி அவர்களை ஊக்குவித்து ஒரு சிறந்த கேப்டனாக செயல்படுகிறார் என்று சுனில் கவாஸ்கர் கூறினார். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு முதல் சாம்பியன் பட்டத்தை ஹர்திக் பாண்டியா வென்று கொடுத்தார். அதன் மூலம் இந்திய அணியை டி 20 தொடரில் கேப்டனாக சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குடும்ப சூழ்நிலை காரணமாக விலகியுள்ள நிலையில், இந்திய அணியை துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் ஒருநாள் போட்டியில் வழி நடத்த உள்ளார். இந்த போட்டியில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா வெற்றி பெற்று தந்தால் விரைவில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக முத்திரை குத்த படுவார் என்று காவஸ்கர் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.