WTC FINAL 2023 : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரோஹித் சர்மாவுக்கு காவஸ்கர் அளித்த யோசனை..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதிய நிலையில், இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றி அசத்தியது.மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய உள்ள நிலையில் அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ஒரு வீரர் சரியாக இருப்பார் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மாவுக்கு யோசனை வழங்கியுள்ளார்.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் இலங்கை அணியுடன் புள்ளிகள் அடிப்படையில் போட்டி ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது, எனவே இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரிஷாப் பந்த் ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறாத நிலையில், இந்திய அணிக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதே சமயத்தில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா உடைய இடத்தை அணியில் நிரப்பி உள்ளனர், ஆனால் கார் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் உள்ள பந்த் இடத்தை இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாத நிலை உள்ளதால் இந்திய அணி தவித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் காவஸ்கர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ஒரு வீரரை பரிந்துரை செய்துள்ளார், இது குறித்து பேசிய கவாஸ்கர் கே.எல்.ராகுல் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மிகவும் இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறினார், இங்கிலாந்து மண்ணில் ராகுல் நல்ல ரெகார்ட் வைத்துள்ளார் மேலும் இந்திய அணிக்காக 5 அல்லது 6 வது இடத்தில் கே.எல்.ராகுல் விளையாடினால் அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் உறுதியாக இருக்கும் என்று கூறினார்.
அதாவது இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் ரன்கள் பெற தவித்து வருகிறார் மேலும் கீப்பிங் செய்வதிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சில தவறுகள் செய்த நிலையில், கவாஸ்கர் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று ரோஹித் சர்மாவுக்கு விடுத்த கோரிக்கை சரியானதாக இருக்கும் என்று சில ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.