ஒருநாள் தொடரில் ஸ்மித் தான் கேப்டன்..!! பேட் கம்மின்ஸ் விலகல்..!! | smith to lead aus in odi series

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்த தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகிய நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி முடித்த நிலையில், அடுத்து உலக கோப்பை தொடர் பயிற்சியாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற நிலையில் கைப்பற்றியது, மேலும் இந்த தொடரின் பாதியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக விலகினார்.
இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகுவதாகவும் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் , தற்போதைய நிலையில் பேட் கம்மின்ஸ் தனது குடும்பத்துடன் இருக்க விரும்புவதால் ஸ்மித் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று கூறினார்.
மேலும் ஆஸ்திரேலியா அணியில் இருந்து காயம் காரணமாக ஜோஷ் ஹேஸில்வுட் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் விலகியுள்ள நிலையில், நாதன் எல்லிஸ் அணியில் புதிதாக இடம் பெற உள்ளதாகவும், குறிப்பாக காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு டேவிட் வார்னர், கிளென் மாக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் திரும்பியுள்ளனர் என்று கூறினார்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் ஒருநாள் போட்டியில் வரும் மார்ச் 17 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா ஒருநாள் அணி : ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (வி.கீ), சீன் அபோட், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஷ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.