டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி...முதல் பேட்டிங் டெல்லி!| DC vs SRH Ipl 2023 Toss Update

ஐபிஎல் 2023 அரங்கில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிகள் அர்ஜுன் ஜெட்லி மைதானத்தில் மோதிக்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
ஐபிஎல் 2023இல் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இருக்கும் புள்ளி அட்டவணையில் கடைசி இரண்டு இடங்களில் இருப்பது டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி. இரண்டு அணிகளுமே இதுவரை மொத்தம் 7 போட்டிகள் விளையாடியுள்ளனர். இருவருமே 2 வெற்றி மற்றும் 5 தோல்வியும் சந்தித்துள்ளனர். இந்த போட்டியானது இரு அணிகளுக்குமே மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறப் போகும் அணிக்கு புள்ளி அட்டவணையில் முன்னேறும் வாய்ப்புள்ளது. டெல்லி மற்றும் ஹைதெராபாத் அணி கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி போட்டியிட்டனர். அதில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆகவே, இந்த போட்டியில் டெல்லி அணி மீண்டும் வெற்றிபெறுமா அல்லது தோல்வியைக் கண்ட ஹைதெராபாத் அணி வெறித்தனமாக விளையாடி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது. ஆகவே, டெல்லி கேபிட்டல்ஸ் பௌலிங் செய்ய உள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் பிளேயிங் லெவன் : டேவிட் வார்னர், பில் சால்ட், மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், பிரியம் கார்க், ரிபால் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.
சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் பிளேயிங் லெவன் : ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், அகேல் ஹொசைன், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.