கடைசி நொடி வரை பரபரப்பு...ஹைதெராபாத் அபார வெற்றி | RR vs SRH IPL 2023 Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 52வது லீக் போட்டியானது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேஇ ரூட், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜோஸ் பட்லர், எஸ்வி சாம்சன்(சி), டிசி ஜூரல், யுஸ்வேந்திர சாஹல், முருகன் அஷ்வின், சந்தீப் சர்மா, குல்தீப் யாதவ்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் - ஆர்.ஏ. திரிபாதி, அப்துல் சமத், விவ்ராந்த் ஷர்மா, ஏ.கே. மார்க்ரம்(சி), அபிஷேக் ஷர்மா, எம். ஜான்சன், க்ளென் பிலிப்ஸ், ஹெச் கிளாசென்(வாரம்), பி.குமார், டி.நடராஜன், எம்.மார்க்கண்டே.
முதல் இன்னிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்:
நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் விக்கெட் இழப்பு குறைவு. அணியின் தொடக்க வீரர்களே ரன்களை அடித்து குவித்தனர். ராஜஸ்தான் அணியில் இருந்து முதலில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (35), ஜோஸ் பட்லர் (95) இருவரும் ஹைதெராபாத் அணி வீரர்களை துவம்சம் செய்தனர். இருப்பினும் 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் அவுட்டானதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் அட்டகாசமாக விளையாட ஆரம்பித்தனர். ராஜஸ்தான் அணி அடுத்த விக்கெட்டாக ஜோஸ் பட்லரை 18வது ஓவரில் இழந்தது. முதல் இன்னிங்ஸ் முடியும் வரை சஞ்சு சாம்சன் (66) மற்றும் ஷிம்ரான் ஹெட்மேயர் (7) ஆட்டமிழக்காமல் விளையாடினார்கள். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தனர். ஹைதெராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் மற்றும் பார்கோ ஜான்சன் விக்கெட் எடுத்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்:
ராஜஸ்தானை விட ஹைதெராபாத் அதிக விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், பேட்டிங் செய்த வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அன்மோல்ப்ரீத் சிங் (33), அபிஷேக் சர்மா (55), ராகுல் திரிபாதி (47), ஹென்ரிச் கிளாசீன் (26), ஐடன் மார்க்ரம் (6), கிளென் பிலிப்ஸ் (25) ஆகிய வீரர்கள் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சில் சிக்கினர். இருப்பினும் ரன்களை எடுத்து ஆட்டத்தை சமநிலையில் வைத்திருந்தனர். இதனால் போட்டி முடியும் வரையில் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. போட்டி முடியும் போது அப்துல் சமத் (17) மற்றும் மார்கோ ஜான்சன் (3) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் ஹைதெராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட் எடுத்து மிரள வைத்தார்.