ஐபிஎல் 2023 தொடரில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்..!! | srh washington sundar ruled out of ipl 2023
![ஐபிஎல் 2023 தொடரில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்..!! | srh washington sundar ruled out of ipl 2023](https://www.sportspartans.com/assets/uploads/news-2191.jpg)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் என்று அணி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் புதிய கேப்டன் ஐடென் மார்க்கரம் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது, மேலும் நடப்பு தொடரில் வெற்றிகளை பெற ஹைதராபாத் அணி மிகவும் போராடி வருகிறது குறிப்பாக 7 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பெரிய அளவில் இன்னும் இந்த தொடரில் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பக்கபலமாக இருந்தார். மேலும் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை பெற்று மீண்டும் பார்முக்கு திரும்பினார்.
இந்நிலையில் அணிக்கு இனி வரும் போட்டிகளில் பக்கபலமாக இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில், திடீர் திருப்பமாக எதிர்பாராத விதமாக தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் 2023 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அணி நிர்வாகம் சார்பில் வாஷிங்டன் சுந்தர் இடத்தில் மாற்று வீரரை களமிறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது தகவல் வெளியாகியுள்ளது.