சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட் ..!! | ipl srh vs rr toss 2023

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் 4 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள், இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியானது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை புதிய கேப்டன் ஐடென் மார்க்கரம் தலைமையில் இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது, ஆனால் இந்த போட்டியில் கேப்டன் மார்க்கரம் கலந்து கொள்ள முடியாத நிலையில் அணியை முன்னணி வீரர் புவனேஷ்வர் குமார் வழி நடத்த உள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கி அசத்த உள்ளது, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று அசத்தினார்கள். அதே போல் இந்த 2023 ஆம் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற முயல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி கேப்டன் புவனேஸ்வர் குமார் பவுலிங்கை தேர்வு செய்தார், இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஐபிஎல் 2023 ஆம் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளும் முழுவீச்சில் செயல் படுவார்கள் என்பதால் போட்டி அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேயிங் லெவன் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளேயிங் லெவன் : மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ்(வி.கீ), உம்ரான் மாலிக், அடில் ரஷித், புவனேஷ்வர் குமார்(கேப்டன்), டி நடராஜன், ஃபசல்ஹாக் ஃபரூக்கி