4ஸ், சிக்ஸராக அடித்து விளாசி ரன்களைக் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி... SRHஅணிக்கு வைத்த டார்கெட் இவ்வளவா? | SRH vs RR IPL 2023 Updates

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடருக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஐபிஎல் 2023 தொடர் அட்டவணைப் படி, இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆட்டம் தொடங்கப்பட்டு யஷஸ்வி 3 பந்துகளில் ஐந்த் ரன்களை விலாசினார். அதன் படி, பட்லர் 2.1 ஓவரில் தனது முதல் சிக்ஸரைப் பதிவு செய்தார். இந்த இரு வீரர்களின் அதிரடியான பேட்டிங் மூலம் 4 ஓவரில் 56 ரன்களைக் குவித்தனர். இதில், பட்லர் 5.3 ஓவரில் அரை சதம் அடித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்திருந்த வேளையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தவாறு அடுத்த ஓவரிலேயே அவுட் ஆனார். இதற்கு மேல், அணியின் மற்ற வீரர்கள் எத்தனைரன்கள் எடுப்பார்கள் என்ற சந்தேகத்துடன் இருந்தனர். பிறகு, ஜெயிஸ்வால், சாம்சன் பார்ட்னர்ஷிப் ஆட்டம் தொடங்கியது.
இருப்பினும், ஜெயிஸ்வால் மற்றும் சாம்சன் இருவருமே அரை சதம் அடித்த பின்னரே, ஆட்டத்தை விட்டு வெளியேறினர். இவ்வாறு, 4, 6 என ரன்களை ஐத்து, 18.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தனர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பின், கடை 5 பந்துகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 197 ரன்களைக் கொண்டிருந்தது. பின், 20 ஓவரில் 203 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளுடன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 204 ரன்களை டார்கெட் வைத்துள்ளது. அடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து இந்த டார்கெட்டைத் தாண்டுமா என்பதைப் பார்க்கலாம்.