சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின் குறித்த முழு அப்டேட்..!! | srh vs rr preview ipl 2023

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரின் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் வரும் நிலையில், அடுத்து நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின் பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை மற்றும் ட்ரீம் லெவன் கணிப்புகள் குறித்து காண்போம்.
இந்திய மண்ணில் மிகவும் விமர்சையாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் அடுத்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் ஐடன் மார்க்ராம் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அணியின் முன்னணி வீரர் புவனேஷ்வர் குமார் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்க உள்ளது.
போட்டி குறித்த விவரம் :
4 வது லீக் போட்டி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
நேரம் & நாள் : 3:30 p.m & ஞாயிற்றுக்கிழமை
தேதி : 2 ஏப்ரல் 2023
மைதானம் : ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
வெற்றி கணிப்பு :
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை ஐபிஎல் 2023 ஆம் தொடரில் கட்டாயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது, குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அணியை புதிய கேப்டன் ஐடன் மார்க்ராம் வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஐபிஎல் 2023 ஆம் தொடரை வெற்றியுடன் தொடங்க ஹைதராபாத் அணி முழுவீச்சில் செயல்படும் என்று தெரிய வந்துள்ளது.
அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதி சுற்று வரை சென்று தோல்வியை தழுவியதால் நடப்பு ஐபிஎல் தொடரில் தவறுகளை சரி செய்து வெற்றிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் 2023 4 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டும் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வெற்றி வாய்ப்பு இரு அணிகளும் சமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் அறிக்கை :
ஐபிஎல் 2023 தொடரின் 4 வது லீக் போட்டி நடைபெற உள்ள ஹைதெராபாத் பிட்ச் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த உதவும் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இரு அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த வாய்ப்பு அதிக அளவில் உள்ளது, எனவே இந்த போட்டி அதிக ரன்கள் பதிவாக கூடிய போட்டியாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் லெவன் அணி கணிப்பு :
ஐபிஎல் தொடர் ஆரம்பித்த உடனே கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விரும்பி விளையாட கூடிய ட்ரீம் லெவன் போட்டிக்கான, ட்ரீம் லெவன் அணி குறித்த அப்டேட்.
கேப்டன் : ஹாரி புரூக்
துணை கேப்டன் : யுஸ்வேந்திர சாஹல்
பேட்ஸ்மேன்கள் : மயங்க அகர்வால், ஜோஸ் பட்லர், ராகுல் திரிபாதி
ஆல்ரவுண்டர்கள் :வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக்
விக்கெட் கீப்பர் : சஞ்சு சாம்சன்
பவுலர்கள் : ஓபேட் மெக்காய், அடில் ரஷீத், நடராஜன்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் (தோராயமான) : மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், உபேந்திர யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித், கார்த்திக் தியாகி.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், படிக்கல், சாம்சன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், சாஹல், குல்தீப் சென், ஓபேட் மெக்காய்