என்னடா ஹைதராபாத் அணிக்கு வந்த சோதனை.! பட்லர், போல்ட்டின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி வெற்றி.! | SRH vs RR 2023 Final Result

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரின் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேலையில், இன்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. இவ்வாறு பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 203 ரன்களைப் பெற்று 204 ரன்களை ஹைதராபாத் அணிக்கு டார்கெட் வைத்தது.
இதனையடுத்து, ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த முதல் இரண்டு பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளைப் பெற்றது. ஆனால், விக்கெட்டுகளைப் பெற்றதால் துவண்டு போன ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக மயங்க் அகர்வால் ரன்களை அடிக்கத் துவங்கினார். இதில், ப்ரூக் மற்றும் அகர்வால் பார்ட்னர்ஷிப்பில் ஆட்டம் மெதுவாக நடந்தது.
இதனைத் தொடர்ந்து, 13 ஆவது ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடியாக ஆடியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 18 ஓவரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹைதராபாத் அணியை திக்கு முக்காடச் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். பின், 131 ரன்களுடன் ஆட்டம் முடிந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக வென்றது.