விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற பெங்களூர் அணி..! சதம் அடித்தும் தோற்ற ஹைதராபாத்.. | SRH vs RCB IPL 2023

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 65 ஆவது போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி மே 18, 2023 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 07.30 மணி அளவில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது.
இந்த இரு அணிகளுக்கிடையேயான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் முதலில் அபிஷேக் சர்மா 15 பந்துகளுக்கு 11 ரன்கள் அடித்தது. த்ருப்பதி 12 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்தனர். மேலும், மார்க்ரம் 20 பந்துகளுக்கு 18 ரன்களையும் ப்ரூக் 19 பந்துகளுக்கு 27 ரன்களையும் எடுத்திருந்தார். கியாஸ்ஸன் 51 பந்துகளுக்கு 104 அடித்து சதம் அடித்தார். மேலும், க்ளென் பிலிப்ஸ் 4 பந்துகளுக்கு 5 ரன்கள் அடித்தார். இந்த ஆட்டத்தின் முடிவில் 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகளுடன் 186 ரன்கள் அடித்து, 187 ரன்களை இலக்காக வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது 63 பந்துகளுக்கு 100 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அடுத்ததாக களமிறங்கிய டூ பிளக்ஸிஸ்-ன் ஆட்டமும் சூடுபிடித்து 47 பந்துகளுக்கு 71 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார். பிறகு, க்ளன் மேக்ஸ்வெல் 3 பந்துகளுக்கு 5 ரன்களும், மைக்கல் பிரேஸ்வெல் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் என்ற கணக்கில் 2 விக்கெட்டுகளுடன் 187 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை விலாசினர்.