சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் இடையிலான மிரட்டல் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | srh vs mi 2023 toss update
![சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் இடையிலான மிரட்டல் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | srh vs mi 2023 toss update](https://www.sportspartans.com/assets/uploads/news-2131.jpg)
ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
இன்றைய போட்டியில் மோத உள்ள ஹைதெராபாத் மற்றும் மும்பை அணிகள் நடப்பு ஐபிஎல் தொடரை மிகவும் சுமாராக தொடங்கினாலும் தற்போதைய நிலையில் கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் இரு அணிகளும் எதிரணிகளை வீழ்த்தி தொடர் வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளார்கள்.
இந்த 25 வது லீக் போட்டியில் விளையாட உள்ள ஹைதெராபாத் மற்றும் மும்பை அணிகள் சார்பில் யார் முதலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வார்கள் என்று பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையில் எழுந்துள்ளது.ஐபிஎல் 2023 தொடரில் தங்கள் வெற்றி பயணத்தை தொடரும் வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடன் மார்க்ராம் பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய ரோஹித் சர்மா தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் : மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(வி.கீ), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் : ரோஹித் சர்மா (கேப்டன்) ,இஷான் கிஷன் (வி.கீ), கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, அர்ஜுன் டெண்டுல்கர்.