சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மாற்றம் ..?? மும்பை அணி போட்ட ஸ்கெட்ச்..!! | srh vs mi 2023 playing 11 update

ஐபிஎல் 2023 தொடரை தோல்விகள் உடன் தொடங்கி தற்போது தொடர்ச்சியாக அசத்தல் வெற்றிகளை பெற்று மிரட்டல் அணிகளாக வலம் வரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையில் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகள் சார்பில் புதிய திட்டங்கள், பிளேயிங் லெவன் மாற்றங்கள் என பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று நடைபெற உள்ள 25 வது லீக் போட்டியில் விளையாட உள்ள ஹைதெராபாத் மற்றும் மும்பை அணிகள் சார்பில் யார் முதலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வார்கள் என்று பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.அதே சமயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வலு சேர்க்கும் வகையில் கேப்டன் ஐடென் மார்க்கம் மற்றும் இளம் வீரர் ஹார்ரி புரூக் மிரட்டல் பார்மில் உள்ளார்கள்.மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இளம் வீரர் திலக் வர்மா மற்றும் அனுபவ வீரர் சூர்யா குமார் யாதவ நல்ல பார்மில் உள்ளதால் அணியின் பேட்டிங் ஆர்டர் பலமானதாக தெரிகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுள்ளது, எனவே பிளேயிங் லெவனில் மாற்றம் பெரிய அளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அணியில் ஆல்ரவுண்டர் இடத்தில் இடம்பெற்ற அபிஷேக் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்றொரு ஆல்ரவுண்டர் ஆன வாஷிங்டன் சுந்தர் இம்பாக்ட் பிளேயராக அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் முழுமையாக இடம் பெற முடியாத கேப்டன் ரோஹித் சர்மா இம்பாக்ட் பிளேயராக களமிறங்கினர், தற்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதால் இந்த போட்டியில் முழுமையாக பங்கேற்பார் என்று தெரிய வந்துள்ளது. மும்பை அணியின் பவுலிங் யூனிட்டில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சிறந்த பார்மில் உள்ளதால், இந்த போட்டியில் தங்கள் வெற்றி பயணத்தை தொடர அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று கூறினால் மிகையில்லை.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் லெவன் (தோராயமான ) : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் (வி.கீ), மயங்க மார்கண்டே, மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : ரோஹித் சர்மா (கேப்டன்) ,இஷான் கிஷன் (வி.கீ), கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ரிலே மெரிடித்.