ஹைதராபாத் vs கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியில் ப்ளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் …?? | srh vs kkr 2023 ipl update

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
இந்த ஐபிஎல் 2023 தொடரில் இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிய போட்டியில் ஒரு அதிரடி ஆட்டம் அரங்கேறியது, மேலும் அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிலடி கொடுக்குமா..?? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அசத்தல் பார்மில் உள்ளது அணிக்கு பலம் சேர்க்கும்,மேலும் கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுயாஷ் சர்மா அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பார்மில் உள்ளார்.மேலும் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில் கடந்த போட்டியில் ஹைதராபாத் அணியில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் அகேல் ஹொசைன் இடத்தில் மார்கோ ஜான்சன் விளையாட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கொல்கத்தா அணியிலும் கடந்த போட்டியில் இடம் பெறாமல் இருந்த அனுபவ வீரர் ஜேசன் ராய் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் (தோராயமான ): அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம் (கேப்டன்), ஹாரி புரூக், ஹென்ரிச் கிளாசென் (வி.கீ), அப்துல் சமத், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் சர்மா.