SPORTSPARTANS
SPORTSPARTANS
  • உலகக் கோப்பை 2023
  • கிரிக்கெட்
  • கால்பந்து
  • ஹாக்கி
Trending:
  1. Home
  2. கிரிக்கெட்
  3. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்கான கணிப்புகள் அடங்கிய முழு விவரம்..!! | srh vs kkr 2023 ipl preview...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்கான கணிப்புகள் அடங்கிய முழு விவரம்..!! | srh vs kkr 2023 ipl preview

Written by Mugunthan Velumani - Updated on :May 04, 2023 & 12:00 [IST]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்கான கணிப்புகள் அடங்கிய முழு விவரம்..!! | srh vs kkr 2023 ipl preview

ஐபிஎல் 2023 தொடரில் போட்டிகள் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.

இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய கேப்டன் ஐடென் மார்க்ரம் தலைமையில் வெற்றிகளை பெற போராடி தான் வருகிறது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றிகளை பெற மிகவும் தடுமாறி தான் வருகிறது, குறிப்பாக இரு அணிகளும் நடப்பு தொடரில் வெறும் 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பு தொடரில் புள்ளிகளில் முன்னேற்றம் அடைய இரு அணிகளும் முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.  

போட்டி குறித்த விவரம் : 

47 வது லீக் போட்டி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நேரம் & நாள் : 7:30 p.m & வியாழக்கிழமை 

தேதி : 4 மே 2023

மைதானம் : ராஜீவ் காந்தி சர்வதேச  மைதானம், ஐதராபாத். 

ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.

பிட்ச் அறிக்கை : 

இந்த போட்டி நடைபெற உள்ள ஹைதெராபாத் பிட்ச் அசத்தல் பேட்டிங்கை  வெளிப்படுத்த உதவும் என்று தெரிய வந்துள்ளது, மேலும் அதே சமயத்தில் இங்கு போட்டியின் பாதிக்கு மேல்  ஸ்பின்னர்கள் நல்ல பவுலிங்கை வெளிப்படுத்த இந்த மைதானம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ட்ரீம் லெவன் டீம் கணிப்பு  : 

கேப்டன் - ரஹ்மானுல்லா குர்பாஸ்

துணை கேப்டன் - வருண் சக்கரவர்த்தி

விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென்

பேட்ஸ்மேன்கள்  - அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ஐடென் மார்க்ரம் 

ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், அகேல் ஹொசைன்.

பந்துவீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, சுயாஷ் சர்மா. 

வெற்றி கணிப்பு  : 

சன்ரைசர்ஸ்  ஹைதராபாத் அணியை பொறுத்தவரை தொடர் தோல்விகளை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றியை பதிவு செய்து நல்ல பார்மில் உள்ளது. அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக போராடி தோல்வியை தழுவி உள்ளது.

இந்நிலையில் நடப்பு தொடரில் அனைத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற ஒரு அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு சம அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் (தோராயமான) : அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம்(கேப்டன்), ஹாரி புரூக், ஹென்ரிச் கிளாசென்(வி.கீ), அப்துல் சமத், அகேல் ஹொசைன், மயங்க மார்கண்டே, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கேப்டன்), ஷர்டுல் தாக்கூர், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், டேவிட் வைஸ், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் சர்மா.

Share

தொடர்பான செய்திகள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்
Photography
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்
September 28, 2023
IND vs AUS Toss Report: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு-பிளேயிங் லெவன் இதோ
Photography
IND vs AUS Toss Report: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு-பிளேயிங் லெவன் இதோ
September 24, 2023
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது டெஸ்ட் : புதிய மைல் கல்லை எட்டும் விராட் கோலி
Photography
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது டெஸ்ட் : புதிய மைல் கல்லை எட்டும் விராட் கோலி
July 19, 2023
உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி
Photography
உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி
July 19, 2023
மான்செஸ்டர் : இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது
Photography
மான்செஸ்டர் : இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது
July 19, 2023
இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகிறார் ருதுராஜ் கெய்க்வாட் ; ஆசிய விளையாட்டுக்கான  இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
Photography
இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகிறார் ருதுராஜ் கெய்க்வாட் ; ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
July 15, 2023
லேட்டஸ்ட் நியூஸ்
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்
September 28, 2023
IND vs AUS Toss Report: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு-பிளேயிங் லெவன் இதோ
IND vs AUS Toss Report: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு-பிளேயிங் லெவன் இதோ
September 24, 2023
ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் - கோப்பையினை கொண்டு செல்ல பேருந்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் - கோப்பையினை கொண்டு செல்ல பேருந்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
July 21, 2023
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது டெஸ்ட் : புதிய மைல் கல்லை எட்டும் விராட் கோலி
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது டெஸ்ட் : புதிய மைல் கல்லை எட்டும் விராட் கோலி
July 19, 2023
உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி
உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி
July 19, 2023
மான்செஸ்டர் : இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது
மான்செஸ்டர் : இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது
July 19, 2023

  • கிரிக்கெட்
  • கால்பந்து
  • ஹாக்கி
  • மற்றவை

About Us Privacy Policy Contact Us Terms Of Use Advertise with Us

© Copyright Sportspartans All Rights Reserved