மாஸ் பண்ணிட்டாங்க ஹைதெராபாத்...டெல்லிக்கு இது தான் டார்கெட் | DC vs SRH 1st Innings Highlights

ஐபிஎல் 2023 அரங்கில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிகள் அர்ஜுன் ஜெட்லி மைதானத்தில் மோதிக்கொள்ள உள்ளார்கள். இதில் டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஹைதெராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் மயங்க அகர்வால் முதலில் களத்தில் இறங்கினர்.
ஆரம்பம் சற்று மெதுவாக இருந்தாலும், 2வது ஓவரில் இஷாந்த் ஷர்மாவின் பத்து வீச்சில் சிக்கி அவுட் ஆனார் மயங்க அகர்வால் (5). அவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மாவிற்கு பக்கபலமாக இருக்க விளையாட வந்தார் ராகுல் திரிபாதி. இருவரும் மெதுவாக ஹைதெராபாத் அணிக்கு ரன்களை எடுக்க ஆரம்பித்தனர். ராகுல் ஒரு சிக்ஸ் அடித்து கொஞ்சம் வேகம் கட்ட முடிவெடுத்தார். ஆனால் அது அவருக்கு வினையாக முடிந்துவிட்டது. போட்டி ஆரம்பித்த 4வது ஓவரில் மிட்செல் மார்ஷ் பந்து வீச்சில் அவுட் ஆகினார் ராகுல் திரிபாதி (10). என்ன தான் ஹைதெராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் அபிஷேக் சர்மா நிதானமாக விளையாடி ரன்களை தக்க வைத்தார்.
சுமூகமாக போட்டி நகரும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது 9வது ஓவரில் ஐடன் மார்க்ராம் (8) மற்றும் ஹாரி ப்ரூக் (0) தொடர்ந்து அவுட் ஆனது ஹைதெராபாத் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அபிஷேக் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு உறுதுணையாக களமிறங்கினார் ஹென்ரிச் கிளாசென். துவண்டு போன பேட்டிங்கை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வர இருவரும் அருமையாக முயற்சிச் செய்தனர். இவர்களை சமாளிக்க முடியாமல் டெல்லி அணியின் பௌலர்கள் கதறினர்.
ஆனால் அக்சர் படேலின் 11வது ஓவரில் துரதிஷ்ட வசமாக அபிஷேக் சர்மா (67) ஆட்டமிழந்தார். அதற்கு பின்னர் ஹென்ரிச் கிளாசென்-க்கு கை கொடுக்க விளையாட ஆரம்பித்தார் அப்துல் சமத். இருவரும் சிக்ஸ், பௌண்டரி என்று அடித்து அதிக ரன்களை குவித்தனர். ஆனால் மிட்செல் மார்ஷின் பௌலிங்கில் மாட்டிக்கொண்டார் அப்துல் சமத் (28). இறுதி ஓவரை நிறைவு செய்ய ஹென்ரிச் கிளாசென் (53) மற்றும் அகேல் ஹொசைன் (16) பொறுமையாக விளையாடினார்கள். அதன் அடிப்படையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் ஹைதெராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தனர்.
இவர்களைத் தொடர்ந்து விளையாட போகும் டெல்லி அணி 198 ரன்கள் எடுக்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியது மிட்செல் மார்ஷின். இவர் மொத்தம் 4 விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்காக சிறப்பாக பௌலிங் செய்துள்ளார்.