ஐபிஎல் 2023 தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பிளேயிங் லெவன் ரெடி ..!! | srh playing 11 for ipl 2023

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 2016 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வரும் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று தனது நிலையை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிரட்டல் பிளேயிங் லெவன் உடன் தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் புதிய கேப்டன் உடன் களமிறங்க உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல முழு வீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு உதவும் வகையில் அணியின் அதிரடியான பிளேயிங் லெவன் பற்றிய விவரங்கள் காண்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் இடத்தில் களமிறங்க புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் மயங்க் அகர்வால் மற்றும் இளம் வீரர் அபிஷேக் சர்மா இருவருக்கும் அதிக வாய்ப்புள்ளது, அவர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கேப்டன் ஐடன் மார்க்ராம் தலைமையில் இளம் அதிரடி வீரர் ஹார்ரி புரூக் மற்றும் ராகுல் திரிபாதி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சிறந்த பவுலிங் யூனிட்டை வைத்திருக்கும் அணிகளில் முக்கிய அணியாக விளங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வேகத்தில் மிரட்ட புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் மற்றும் நடராஜன் உள்ளார்கள், மேலும் ஸ்பின்னர்கள் பிரிவில் வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே ஆகியோர் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ஒரு அசத்தல் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளிப்படுத்த உள்ளது என்பது உறுதி. ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் ஏப்ரல் 2ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் : மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், ஐடன் மார்க்ராம்(கேப்டன்), அப்துல் சமத், ஹென்ரிச் கிளாசென் (வி.கீ), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்/நடராஜன் , மார்கோ ஜான்சன்.