ஐபிஎல் 2023 : ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்பதில் தாமதம்..?? ரசிகர்கள் அதிர்ச்சி..!! | south africa players likely to miss some matches in ipl 2023

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகா உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்பதில் தாமதம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கு தென்னாப்பிரிக்கா அணி நேரடியாக தகுதி பெறுவதில் தற்போது பிரச்சனை உள்ளதாக தெரிகிறது.அதாவது ஐசிசியின் உலக கோப்பை தொடருக்கான சூப்பர் லீக் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 9வது இடத்தில் உள்ளதால் உலகக்கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்க வரும் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அயர்லாந்து அணிக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்கா வீர்ரகள் பங்கேற்க தாமதம் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளில் மொத்தம் 6 அணிகள் தென்னாபிரிக்காவின் முன்னணி வீரர்களை தங்கள் அணியில் வைத்துள்ளார்கள், அவர்கள் முறையே
1) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஐடென் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன்.
2) டெல்லி கேப்பிட்டல்ஸ் -நார்ஜே, லுங்கி இங்கிடி.
3) மும்பை இந்தியன்ஸ் - டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், டெவால்ட் பிராவிஸ்.
4) குஜராத் டைட்டன்ஸ் - டேவிட் மில்லர்
5) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குயின்டன் டி காக்
6) பஞ்சாப் கிங்ஸ் - காகிசோ ரபாடா
இந்த வீரர்கள் முதல் சில ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்க வாய்ப்புள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் ஏலத்திற்கு முன் பிசிசிஐ நிர்வாகத்திடம் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தொடர் முழுவதும் பங்கேற்பார்கள் என்று கூறியது, ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையை தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் பிசிசிஐ நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில் பிசிசிஐ நிர்வாகம் இதற்கு உடன்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடரின் ஆரம்பத்திலேயே சில அணிகள் தங்கள் அணியின் முன்னணி வீரர்கள் இல்லாமல் பங்கேற்க உள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் பிசிசிஐ நிர்வாகத்திடம் இருந்து சில ஐபிஎல் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர்கள் விலகுவது குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.