டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி உலக சாதனை..!! டி காக் அதிரடி..!! | south africa highest run chase record

தென்னாப்பிரிக்கா மண்ணில் உள்ள செஞ்சுரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய சர்வதேச டி20 போட்டியில் பல சாதனைகள் அரங்கேறியது, மற்றும் தென்னாப்பிரிக்கா அணி முக்கிய உலக சாதனை படைத்து அசத்தியது.
கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்கள் ஈர்க்கும் வகையில் குறைந்த ஓவர்கள் கொண்ட டி20 தொடர் விளங்குகிறது இதற்கு காரணம் இந்த டி20 தொடரில் தான் பல அதிரடி சாதனைகள் மற்றும் அதிரடி ஆட்டங்கள் பல தருணங்களில் அரங்கேறுகிறது, எனவே உலக அளவில் பல ரசிகர்களை கவர்ந்து உள்ளது.
தென்னாபிரிக்கா சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று வடிவ தொடர்களில் விளையாடி வருகிறது, இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கை அதிர வைத்தார்கள்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்கா அணி பவுலர்களை சிதறடித்தார்கள், குறிப்பாக ஜான்சன் சார்லஸ் 118 (46) 11 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உட்பட சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 258 ரன்கள் பதிவு செய்த நிலையில் டி20 தொடரில் தனது அதிகபட்ச ரன்கள் பெற்று சாதனை படைத்தது.
அதன்பின் இமாலய இலக்கை அடைய களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தொடக்கம் முதலே மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்கள், குறிப்பாக அணியின் துவக்க வீரர் குயின்டன் டி காக் 100(44) 8 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் உட்பட சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 18.5 ஓவர்களிலேயே 259 ரன்கள் பெற்று சர்வதேச டி 20 தொடரில் அதிக ரன் சேஸ் செய்த அணி என்ற உலக சாதனை படைத்தது.
இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 517 ரன்கள் பதிவு செய்த நிலையில், சர்வதேச டி20 தொடரில் அதிகப்படியான ரன்கள் பதிவான போட்டியாக செஞ்சுரியனில் நடைபெற்ற போட்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியின் நாயகனாக வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த தென்னாபிரிக்கா வீரர் குயின்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச டி20 தொடர் வரலாற்றில் இந்த போட்டி முக்கிய போட்டியாக பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.