தென்னாப்பிரிக்காவின் புதிய டி20 தொடர் ஆரம்பம்…! போட்டிகள், அணிகள் குறித்த முழு விவரங்கள் காண்க.. !
![தென்னாப்பிரிக்காவின் புதிய டி20 தொடர் ஆரம்பம்…! போட்டிகள், அணிகள் குறித்த முழு விவரங்கள் காண்க.. !](https://www.sportspartans.com/assets/uploads/news-1544.jpg)
உலக அளவில் டி20 தொடர்களுக்கு என்ற தனி ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில் அனைத்து முன்னணி ஆண்டுகளும் தங்கள் நாட்டில் உள்நாட்டு குறைந்த ஓவர் கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் புதிய டி20 தொடர் தொடங்க உள்ளது ரசிகர்கள் அனைவரும் அதை காண ஆர்வமாக உள்ளார்கள்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தூட்டும் வகையில் புதிய டி20 லீக் ஜனவரி 10 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா நாட்டில் தொடங்க உள்ளது,தனது முதல் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் இந்த தொடருக்கு தென் ஆப்பிரிக்கா டி20 லீக் அல்லது தெ.ஆ டி20 லீக் என்று பெயரிடப்பட்டுள்ளது.
போட்டிகள் குறித்த விளக்கம் :
தெ.ஆ டி20 லீக் தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன, அவை முறையே ஜனவரி 10 முதல் பிப்ரவரி 11 வரை தொடரில் உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள்.
முதலில் லீக் சுற்றில் நடைபெறும் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் ,அரையிறுதி போட்டியில் நுழையும் அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில்
பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் அட்டவணை :
தெ.ஆ டி20 லீக் தொடரில் நடைபெறும் போட்டிகளின் அட்டவணை,நேரம் என முழு விவரத்தை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
ICYMI...Here are the #SA20 fixtures ? pic.twitter.com/qY4nzeQ0QJ
— SA20_League (@SA20_League) November 9, 2022
பங்கேற்கும் அணிகள் :
1) டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ்
2) ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
3) எம்.ஐ. கேப் டவுன்
4) பார்ல் ராயல்ஸ்
5) சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
6) பிரிட்டோரியா கேபிடல்ஸ்
தெ.ஆ டி20 லீக் அணிகளின் பிளேயர்கள் விவரம் :
1) டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி : குயின்டன் டி காக் (கேப்டன்), அகிலா தனஞ்ஜய, கிறிஸ்டியன் ஜோங்கர், தில்ஷன் மதுஷங்க, டுவைன் பிரிட்டோரியஸ், ஹர்டஸ் வில்ஜோன், ஹென்ரிச் கிளாசென், ஜேசன் ஹோல்டர், ஜான்சன் சார்லஸ், ஜூனியர் டாலா, கீமோ பால், கேஷவ் மஹராஜ், கைல் மேயர்ஸ், மேத்யூ ப்ரீட்சென்கே, பிரீனீ ப்ரீட்சென்கே, டாப்லி, சைமன் ஹார்மர், வியான் முல்டர்.
பயிற்சியாளர்கள் : லான்ஸ் க்ளூஸ்னர் (தலைமை பயிற்சியாளர்), மோர்னே மோர்கல், ஜான்டி ரோட்ஸ்.
2) ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி : ஆரோன் பாங்கிசோ, அல்ஸாரி ஜோசப், டொனாவன் ஃபெரீரா, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஜார்ஜ் கார்டன், ஜெரால்ட் கோட்ஸி, ஹாரி புரூக், ஜான்மேன் மலான், கைல் வெர்ரைன், லியூஸ் டு ப்ளூய், லூயிஸ் கிரிகோரி, லிசாட் வில்லியம்ஸ், மஹீஷ் தீக்ஷனா, மலுசி தீக்ஷனா, மலுசி நீல் பிராண்ட், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்
பயிற்சியாளர்கள் : ஸ்டீபன் பிளெமிங் (தலைமை பயிற்சியாளர்), அல்பி மோர்கல், எரிக் சைமன்ஸ், வாண்டில் குவாவ்
3) எம்.ஐ. கேப் டவுன் அணி : ரஷித் கான் (கேப்டன்), பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், டெலானோ பொட்ஜீட்டர், டெவால்ட் ப்ரீவிஸ், டுவான் ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, கிராண்ட் ரோலோஃப்சென், ஜோஃப்ரா ஆர்ச்சர், ககிசோ ரபாடா, லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித், ஓலி ஸ்டோன், ரஸ்ஸி வான் டெர் டுசென், சாம் ரியான் ரிக்கெல், வக்கார் சலாம்கெயில், வெஸ்லி மார்ஷல், ஜியாத் ஆபிரகாம்ஸ்.
பயிற்சியாளர்கள் : சைமன் கட்டிச் (தலைமைப் பயிற்சியாளர்), ஹசிம் ஆம்லா, ஜேம்ஸ் பாம்மென்ட்.
4) பார்ல் ராயல்ஸ் அணி : டேவிட் மில்லர் (கேப்டன்), ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், கோடி யூசுப், கார்பின் போஷ், டேன் விலாஸ், இயோன் மோர்கன், இவான் ஜோன்ஸ், ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், இம்ரான் மனாக், ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், லுங்கிசானி என்கிடி, மிட்செல் வான் புயூரன், ஓபேட் மெக்காய், சிம்மன்ஸ், தப்ரைஸ் ஷம்சி, விஹான் லுபே.
5) சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி : ஐடன் மார்க்ராம் (கேப்டன்), ஆடம் ரோசிங்டன், ஆயா கமானே, பிரைடன் கார்ஸ், ஜேம்ஸ் புல்லர், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஜோர்டான் ஹெர்மன், ஜுனைட் தாவூத், மார்கோ ஜான்சன், மார்க்வெஸ் அக்கர்மேன், மேசன் கிரேன், ஓட்னியல் பார்ட்மேன், எம் ரோலோஃப் வான் டிரெல் எர்வீ, சிசண்டா மாகலா, டாம் ஆபெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.
பயிற்சியாளர்கள் : அட்ரியன் பிரெல் (தலைமை பயிற்சியாளர்), பாக்கியர் ஆபிரகாம்ஸ், டேல் ஸ்டெய்ன்
6) பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி : வெய்ன் பார்னெல் (கேப்டன்), அடில் ரஷித், அன்ரிச் நார்ட்ஜே, கேமரூன் டெல்போர்ட், டேரின் டுபாவில்லன், ஈதன் போஷ், ஜிம்மி நீஷம், ஜோஷ் லிட்டில், குசல் மெண்டிஸ், மார்கோ மரைஸ், மைக்கேல் பிரிட்டோரியஸ், பில் சால்ட், ரிலீ ரோசோவ், செனுரன் வி முத்துசாமி, ஷானுன் முத்துசாமி, பெர்க், தியூனிஸ் டி ப்ரூயின், வில்லியம் ஜாக்ஸ்.
பயிற்சியாளர்கள் : கிரஹாம் ஃபோர்டு (தலைமை பயிற்சியாளர்), டேல் பென்கன்ஸ்டைன், ஜாக் காலிஸ்
ஒளிபரப்பு தளங்கள் :
தெ.ஆ டி20 லீக் தொடரில் நடைபெற உள்ள போட்டிகளை நேரடி ஒளிபரப்பாக இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா ஆப் மூலம் பார்க்கலாம்.
கிரிக்கெட் ரசிகர்களிடம் 20-ஓவர் (குறைந்த ஓவர்கள்) போட்டிகளுக்கு என மிக பெரிய வரவேற்பு உள்ள நிலையில் இந்த தொடரும் நல்ல வரவேற்ப்பை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.