ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை சுப்மன் கில் வென்றார்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் ஐசிசியின் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை வென்று அசத்தியுள்ளார், இந்திய அணிக்காக சிறந்த ஆட்டத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெளிப்படுத்தி வந்த கில் இந்த விருதுக்கு தகுதியானவர் என்று ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்திய அணிக்கு இந்த ஆண்டில் தொடக்கத்தில் இருந்து ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தி வரும் சுப்மன் கில் 3 சதங்கள் உட்பட 567 ரன்கள் சர்வதேச அரங்கில் பதிவு செய்துள்ளார், குறிப்பாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 208(149) ரன்களை கில் அடித்ததன் மூலம் சர்வதேச அரங்கில் இரட்டை சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில் ஐசிசி சார்பில் சுப்மன் கில், முஹம்மது சிராஜ் மற்றும் நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே ஆகியோர் இந்த விருதை வெல்ல தகுதி பெற்ற நிலையில், வாக்களிப்பின் அடிப்படையில் சுப்மன் கில் ஜனவரி மாதத்தின் ஐசிசி சிறந்த பிளேயர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த விருதை 2022 ஆம் ஆண்டு அக்டோபர் விராட் கோலி வென்றதை அடுத்து தற்போது கில் அதை வென்று அசத்தியுள்ளார்.
இந்த விருதை வென்ற பிறகு பேசிய சுப்மன் கில் கூறியது, ஐசிசியின் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது மேலும் இந்த ஜனவரி மாதம் எனக்கு சிறந்த மாதமாக அமைந்துள்ளது ,இந்த வெற்றியை எனக்கு உதவிய சக அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் மேலும் இந்த விருதுக்கு தேர்வான வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலக கோப்பை தொடரை கைப்பற்றும் என்பதில் முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், சுப்மன் கில் உடைய பார்ம் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை என்று கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.