சுப்மான் கில் மிரட்டல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அசத்தல்..!! | shubman gill smashed mi bowlers 2023

ஐபிஎல் அரங்கில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதினார்கள், இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி இளம் வீரர் சுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி பவுலர்களை திணரடித்தார்கள், குறிப்பாக குஜராத் அணியின் இளம் வீரர் சுப்மான் கில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அசத்தினார் என்று கூறினால் மிகையில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 1 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரி உட்பட 34 பந்துகளில் 57 ரன்கள் பதிவு செய்த நிலையில் குமார் கார்த்திகேயா பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மும்பை அணியை சிதறடித்து 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்கள் பதிவு செய்தனர்.
ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் சுப்மான் கில் 7 போட்டிகளில் 3 அரைசதம் உட்பட 284 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.