இந்தியா vs நியூசிலாந்து : “சொல்லி அடிப்பதில் கில்லி” சுப்மன் கில் ..! புதிய சாதனையை படைத்தார்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 18, 2023 & 16:40 [IST]

Share

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்கள் முதல் ஒருநாள் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகிறார்கள், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி  புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சற்று திணறிய நிலையில் நிதானமாக விளையாடிய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார்.மேலும் இந்த போட்டியில் கில் 106 ரன்களை பெற்ற உடன் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார்.

இதற்கு முன்னர் குறைந்த இன்னிங்சில் ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்களை அடித்த இந்திய வீரர்கள் என்ற பெருமையை விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவரும் பெற்றிருந்தனர்.அவரகள் இருவரும் 24 இன்னிங்சில் 1000 ரன்களை அடித்து இந்த சாதனையை படைத்தனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில்  தனது 19-வது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடும்  சுப்மன் கில் 1000 ரன்களை கடந்து குறைந்த இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.இந்திய அணியின் இளம் வீரர் கில் இலங்கை எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார்.

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து தனது திறனை நிரூபித்துள்ளார், மேலும் தனது அடுத்தது சதங்கள் மூலம்  ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்தை கில் உறுதிபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.