IND VS AUS 2023 : 4வது டெஸ்டில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்..!! ஒருநாள் தொடர் பங்கேற்பில் சந்தேகம்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்பது சந்தேகத்தில் உள்ளது.
இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணி அளித்த 480 ரன்கள் இலக்கை கடந்து 91 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மான் கில் 128(235) ரன்கள் பெற்று அசத்தினார், மேலும் முன்னணி வீரர் விராட் கோலி தனது 75 வது சர்வதேச சதத்தை பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்தார்.
இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்சில் விராட் கோலி 186(364) ரன்கள் பெற்று அசத்தினார், ஆனால் இந்திய அணியின் முக்கிய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்சில் இறுதிவரை பேட்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை, இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் திடீரென ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவ பரிசோதனை செய்ய சென்றுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்தது.
தற்போதைய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது, மேலும் அடுத்து நடைபெற உள்ள ஒரு நாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பு சந்தேகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ மருத்துவ குழு முழுமையாக ஸ்ரேயாஸ் ஐயரை பரிசோதித்த பின் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று இந்திய அணி தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.