ஒருநாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்..!! இந்திய அணியின் பயிற்சியாளர் உறுதி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னணி வீரர் விலகியதாக இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டியில் திடீரென முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், மருத்துவர்கள் பரிசோதனைக்கு கொண்டு பட்ட நிலையில் போட்டியில் இருந்து விலகினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட பிறகு தான், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பயிற்சியாளர் டி திலீப் , ஒரு போட்டியில் காயம் ஏற்படுவது இயல்பு தான். பிசிசிஐயின் சிறந்த மருத்துவர்கள் கண்காணிப்பில் நேஷனல் கிரிக்கெட் அகாடெமியில் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளார், தற்போதைய நிலையில் ஒருநாள் தொடரில் இருந்து மட்டும் விலகியுள்ளார் என்று கூறினார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த தகவல்கள் மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படும் தகவலின்படி ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரின் முதல் ஒரு சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வருகிறது, ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.