ஷ்ரேயஸ் ஐயர் ஒருநாள் தொடரில் இருந்து விலக வாய்ப்பு..!! ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம்..!!

இந்திய அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வில் உள்ளார் மேலும் அடுத்து நடைபெற உள்ள ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணிக்காக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய வீரராக திகழ்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்து விளையாடினார். அதன்பின் மீண்டும் திடீரென முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது மிகுந்த சந்தேகத்தில் உள்ளது, ஆனால் பிசிசிஐ தரப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகுவது குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் நடக்க மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் பங்கேற்பதில் கூட சிக்கல் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி வரும் மார்ச் 17 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.