IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்..?? பிசிசிஐ அதிரடி..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாட உள்ள நிலையில், காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தொடரில் பங்கேற்க பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது, இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலிய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய அணியும் அதற்கு ஏற்றவாறு தயாராகி வருகிறது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மிடில் ஆர்டர் சற்று திணறிய நிலையில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கும் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்ட நிலையில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெற பிசிசிஐ நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.
இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய வீரர்கள் மீண்டும் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் உள்நாட்டு தொடரில் பங்கேற்று தங்கள் உடல் திறனை நிரூபித்தாக வேண்டும் என்ற புதிய நிபந்தனை பிசிசிஐ பின்பற்றி வருகிறது, அண்மையில் இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட பின் இணைந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ரஞ்சி கோப்பையில் தமிழக அணிக்கு எதிராக விளையாடி தனது திறனை நிருபித்த பிறகு தான் அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் இரானி கோப்பை தொடரில் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் மத்திய பிரதேஷ் அணிக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் இடம்பெற்று விளையாடி தனது உடல் திறனை நிரூபித்த பிறகு தான் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 21 வரை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியில் இருந்து ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விளையாடி ஜெயதேவ் உனட்கட் விலகியுள்ள நிலையில், அவரை தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயரும் இடம்பெற மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.