IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்தார்..!! பிசிசிஐ அறிவிப்பு.!!

இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் காயத்தில் இருந்து மீண்டு உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 132 ரன்களில் அசத்தல் வெற்றி பெற்றிருந்தாலும், அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியில் ரன்கள் பெற தடுமாறினார்கள் என்பது உண்மை. இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டரை உறுதி படுத்தும் விதத்தில் காயம் அடைந்து ஓய்வில் இருந்த இந்திய அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதியை நிரூபித்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதுகில் ஏற்பட்ட காயத்தால் விலகிய ஷ்ரேயஸ் ஐயர், பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் ஓய்வில் இருந்தார்.தற்போது ஷ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் திறன் பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இணைந்துள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஷ்ரேயஸ் ஐயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது, இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஷ்ரேயஸ் ஐயர் இணைப்பால் மிகவும் ஸ்ட்ரோங் ஆகி உள்ளது என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் வெற்றியை பெற்று 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது, எனவே 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.