ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷான் மார்ஷ் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், தனது 22 ஆண்டு கால முதல் தர கிரிக்கெட் பயணத்திற்கு பிரிய விடை அளித்தார்.
ஷான் மார்ஷ் தனது 17 வயதில் 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் முதல் தர கிரிக்கெட் பயணத்தை மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரில் தொடங்கினார், மேலும் 2021-2022 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் கனவான மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரின் சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தார்.இதற்கு முன் மேற்கு ஆஸ்திரேலியா அணி 1998-1999 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அளவில் ஷான் மார்ஷ் 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2265 ரன்கள் பெற்றுள்ளார், 73 ஒருநாள் போட்டிகளில் 2773 மற்றும் 15 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார், மேலும் முதல் தர கிரிக்கெட்டில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக ஷீல்டு தொடரில் 3 வது அதிகபட்ச ரன்கள் பெற்றவர் என்ற பெருமையுடன் தனது ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் 39 வது வயது மிக்க ஷான் மார்ஷ் முதல் தர கிரிக்கெட்டில் 20 சதம் மற்றும் 43 அரைசதம் உட்பட 8347 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் 40 வயதை அடைய உள்ள ஷான் மார்ஷ் இன்னும் ஒரு வருடம் பிக்பேஷ் லீக் தொடரில் விளையாட உள்ளார், இதுவரை பிக்பேஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடிய போது 2013-2014 மற்றும் 2014-1015 ஆண்டுகளில் சாம்பியன் பட்டங்களை பெற உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது