ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவது குறித்து ஷேன் வாட்சன் முக்கிய தகவல்..!!

ஐபிஎல் முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்து முன்னாள் சென்னை அணியின் வீரர் ஷேன் வாட்சன் முக்கிய கருத்தை பதிவு செய்துள்ளார், இந்த பதிவை பார்த்த சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது, இந்நிலையில் அனைத்து அணிகளும் தொடருக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு அனைத்து அணிகளும் தங்கள் ஹோம் கிரௌண்டில் போட்டிகளில் விளையாட உள்ளார்கள்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது ஹோம் கிரவுண்ட் ஆன சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டங்கள் வென்று முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி பயணத்திற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி என்று கூறினால் மிகையில்லை.சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் பல தருணங்களில் வெற்றிகளை பெற்று தந்து ஒரு சிறந்த கேப்டனாக திகழ்ந்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அடையாளமாகவும் பலமாகவும் விளங்கும் எம்.எஸ்.தோனி, இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு ஓய்வு பெறப் போவதாக பலர் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள். மேலும் அதற்கு ஏற்றார் போல் தோனியும் சென்னையில் தான் எனது கடைசி ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று ஒரு நிகழ்வில் பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் தோனி ஓய்வு பெறுவது குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் மிகவும் சுவாரசியமான கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது வாட்சன் கூறியது, தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கேள்விப்பட்டேன், என்னை பொறுத்தவரை இன்னும் 3-4 ஆண்டுகள் தோனி நினைத்தால் ஐபிஎல் தொடரில் விளையாடலாம் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய வாட்சன் தோனி மிகவும் சிறந்த உடல் திறன் கொண்டுள்ளார் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். அதை விட ஐபிஎல் தொடரில் தலை சிறந்த கேப்டன் தோனி தான் எனவே அவர் நினைத்தால் கண்டிப்பாக இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம் என்று தனது கருத்தை பதிவு செய்தார். இதை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்கள் நம்பிக்கையுடன் தோனி என்ன முடிவு எடுக்க போகிறார் என்று காண காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.