மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா குறித்து..?? ஷேன் வாட்சன் பரபரப்பு கருத்து.!! | shane watson on rohit sharma ipl 2023

ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பார்ம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்துக்கு பேர்போன வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், குறிப்பாக ஐபிஎல் தொடரில் 241 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 41 அரைசதம் உட்பட 6060 ரன்கள் பதிவு செய்துள்ளார், மேலும் ஐபிஎல் அரங்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறந்த கேப்டனாக வலம் வருகிறார் என்று கூறினால் மிகையில்லை.
ஐபிஎல் 2023 தொடரில் இன்னும் பெரிய அளவில் ஆட்டத்தை வெளிப்படுத்தாத ரோஹித் சர்மா ரன்கள் எதுவும் பெரிய அளவில் பதிவு செய்யவில்லை, குறிப்பாக 7 போட்டிகளில் 25.86 சராசரியுடன் 181 ரன்கள் மட்டுமே பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரோஹித் சர்மாவின் பார்ம் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், கடந்த 4- 5 சீசன் களாகவே ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன்கள் பெறவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் பணிச்சுமையின் காரணமாக தான் சர்வதேச அளவில் சிறந்த வீரராக இருக்கும் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ரன்கள் பெற முடியாமல் தடுமாறி வருகிறார் என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மும்பை அணியின் ரசிகர்கள் இனி வரும் போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெறுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .