அப்போ சச்சினுக்கு இருந்த ஆதரவு.. இப்போ தோனிக்கு இருக்கு.. பொல்லார்ட் கருத்து.. | Sachin Tendulkar and MS Dhoni

16 வருட ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகள் என்றால் அது சென்னையும், மும்பையும் தான். இந்த இரண்டு அணிகளும் மோதுகின்றது என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி எதிர்ப்பார்ப்பு இருப்பது வழக்கம். அந்தவகையில், இதுவரை 5 முறை சாம்பியனான மும்பை அணியை எதிர்த்து 4 முறை சாம்பியன் வென்ற சென்னை அணி கலமிறங்குகிறது. இந்த போட்டி இன்று 7.30 மணியளவில் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2023 ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி குஜராத்திடம் தோல்வியடைந்திருந்தாலும், லக்னோ அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், மும்மை அணி பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. இந்தநிலையில், போட்டி நடைபெற உள்ள வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்பாக சேப்பாக்கம் மைதானம் மற்றும் அகமதாபாத் மைதானத்திலும் சிஎஸ்கே ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இது எதிரணி வீரர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே, வான்கடே மைதானத்தை மும்பை அணியின் கோட்டையாக காட்டுவதற்காக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தரப்பில், இரு முக்கிய ஸ்டாண்டுகளில் மும்பை ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, சிஎஸ்கே ரசிகர்கள் இந்தியாவின் அனைத்து மைதானங்களிலும் நிரம்பி வருவது பற்றி மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து கூறியுள்ளார்.
அதாவது, 'மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் எந்த மைதானத்தில் ஆடினாலும் ரசிகர்கள் ஆதரவு இருக்கும். அப்படியாபட்ட ஆதரவு, தற்போது தோனிக்கு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் ஆடினாலும், சிஎஸ்கே ரசிகர்கள் நிச்சயமாக கூடுவார்கள். ஏனென்றால் சிஎஸ்கே அணிக்காக தோனி அவ்வளவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்'.