பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கிரிக்கெட் துறையில் புதிய அவதாரம்…!! ஆர்வத்தில் ரசிகர்கள்.!!

இந்திய அணியின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்போது புதிய அவதாரத்தில் கிரிக்கெட் விளையாட்டு துறையில் பயணிக்க உள்ளார், இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட உள்ளது, இந்த தொடருக்கான ஏலம் அண்மையில் நடந்து முடிந்த நிலையில் போட்டிக்கான அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன, அந்த அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் அதிக விலைக்கு ஒரு பிளேயர் வாங்கி அசத்தியது, குறிப்பாக இந்திய அணியின் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
அதன்பின் இந்திய அணியின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தங்கள் அணியின் மெண்டராக நியமித்துள்ளது, இந்தியாவிற்காக இரட்டையர் டென்னிஸ் போட்டியில் ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய பெருமைக்குரியவர் சானியா மிர்சா என்பது குறிப்பிடத்தக்கது.
சானியா மிர்சா துபாயில் நடைபெற்று வரும் முக்கிய டென்னிஸ் தொடரின் (WTA 1000) இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், கிரிக்கெட் துறையில் புதிய அவதாரத்தில் தனது பயணத்தை தொடர உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம், எங்கள் அணியின் வீராங்கனைகளை சரியான முறையில் வழிநடத்தி அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அணியின் மெண்டார் பொறுப்பில் சானியா மிர்சா சிறப்பாக செயல்படுவார் என்று கூறியுள்ளார்.