ஐபிஎல் 2023 : மும்பையில் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய நினைவு பரிசு ..!! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சிலை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் மட்டும் அல்லாமல் உலக அளவில் உச்சம் தொட்டு முக்கிய வீரராக விளங்கிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விரைவில் தனது 50 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார், இதனை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கும் வகையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சிலை நிறுவ ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் 2023 ஆம் தொடரின் போது ஏப்ரல் 24ஆம் தேதி சச்சின் 50வது பிறந்த நாள் கொண்டாட உள்ள நிலையில், அதற்கு முன் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது அல்லது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை முன்னால் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
சச்சின் உடைய பிறந்த நாளுக்கு முன்பு சிலை நிறுவ பட்டுவிட்டால் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இரட்டிப்பு ஆனந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி போட்டியில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தான் விளையாடினார் என்பதால் அங்கு சிலை நிறுவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்களும், 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6850 ரன்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய கிரிக்கெட் அணியின் புகழை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக அளவில் பெருமை படுத்திய சச்சின் டெண்டுல்கர் உடைய பெயர் என்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.