50வது பிறந்தநாள் கொண்டாடும் சச்சின் டெண்டுல்கர் .!! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!! | sachin tendulkar 50th birthday

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 50 வது பிறந்த நாளில் காலடி எடுத்து வைக்கிறார். இந்திய கிரிக்கெட்டை உலகில் அனைத்து மூளைக்கும் கொண்டு சென்ற பெருமை சச்சினை தான் சாரும் என்று கூறினால் மிகையில்லை. கிரிக்கெட்டில் சச்சின் செய்த சில மகத்தான சாதனைகள் பற்றி காண்போம்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருக்கு என தனி இடம் இன்றும் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், தனது 24 வருட கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், 1 டி20 போட்டி மற்றும் 6 உலக கோப்பை தொடர்கள் மற்றும் 78 ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகளில் விளையாடி உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 16வது வயதில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கினர், அப்போது தொடங்கிய சச்சினின் கிரிக்கெட் பயணம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு உச்சம் தொட்டு இமாலய வளர்ச்சி அடைந்து விட்டது என்று கூறினால் மிகையில்லை. தற்போது இருக்கும் அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் ஒரு முன்னோடியாக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகள் எண்ணில் அடங்காதவை, அதில் முக்கிய சில சாதனைகள் பற்றி காண்போம்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக 200 ரன்கள் அடித்து முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பிப்ரவரி 24 2010 அன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அடைந்தார்.
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் உடைய மகத்தான முக்கிய சாதனை என்றால் 100 சதங்கள் பதிவு செய்தது தான், இந்த முக்கிய மைல்கல்லை மார்ச் 16 2012 அன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் பதிவு செய்ததன் மூலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தில் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் டி20 தொடரில் 78 போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தினார், குறிப்பாக ஒரு சதம் 13 அரைசதம் உட்பட 2334 ரன்கள் பதிவு செய்துள்ளார் .
சச்சின் இந்திய கிரிக்கெட்டிற்காக செய்த சாதனைகள் எண்ணில் அடங்காதவை என்று கூறினால் மிகையில்லை, சச்சின் சச்சின் என்ற பெயர் எப்போதும் கிரிக்கெட் உலகில் ஒளித்து கொண்டு தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15-16 2013 ஆம் ஆண்டு விளையாடினர். இந்த போட்டியில் 74 ரன்கள் பதிவு செய்து கிரிக்கெட்டிற்கு பிரிய விடை கொடுத்தார், அந்த தருணத்தை நினைத்து பார்க்கும் பொழுது ரசிகர்கள் அனைவரின் முன்னிலையில் கண் கலங்கிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் சச்சின் சச்சின் என்ற அந்த கரகோஷம் இன்றும் அனைவரின் காதிலும் ஒளித்து கொண்டு தான் இருக்கிறது என்று கூறினால் மிகையில்லை.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடைய 50 வது பிறந்தநாள் குறித்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் இணையத்தில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.