போராடி வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..! | RR vs SRH IPL 2023
![போராடி வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..! | RR vs SRH IPL 2023](https://www.sportspartans.com/assets/uploads/news-2245.jpg)
இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 52 ஆவது போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் ஜெய்ஸ்வால் 18 பந்துகளுக்கு 35 ரன்களைக் குவித்தார். எப்போதும் போல, பட்லர் தனது அதிரடி ஆட்டத்தால் 59 பந்துகளுக்கு 95 ரன்களை எடுத்து, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்களை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மேலும், ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 5 பந்துகளுக்கு 7 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து ஓவரில் 214 ரன்கள் எடுத்து 215 ரன்கள் இலக்கு வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தாறுமாறான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் படி, அன்மோல்ப்ரீத் சிங் 25 பந்துகளுக்கு 33 ரன்கள் அடித்தார். மேலும், அபிஷேக் ஷர்மா 34 பந்துகளுக்கு 55 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், ராகுல் திருப்பதி 29 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். மேக்ரோ ஜான்சென் மற்றும் அப்துல் சமத் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 20 ஓவரில் 217 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சரமாரியாக வெற்றி பெற்றது.