அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற பெங்களூர் அணி..! மிகக் கடுமையான தோல்வியைச் சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..! | RR vs RCB IPL 2023

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 60 ஆவது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி மே 14, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 03.30 மணி அளவில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. இந்த அணியில் டூ பிளக்ஸிஸ் 44 பந்துகளுக்கு 55 ரன்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். மேலும், மேக்ஸ்வெல் 33 பந்துகளுக்கு 54 ரன்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, கார்த்திக் 2 பந்துகளுக்கு ஒரு ரன்கூட அடிக்காத நிலையில் ஆட்டமிழந்தார். மேலும், பிரேஸ்வெல், அனுஜ் ராவத் போன்றோர் சேர்ந்து 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவுற்றது. இதில், கடைசியாக 20 ஓவரின் முடிவில் 171 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்றது பெங்களூர் அணி. இதனைத் தொடர்ந்து, 172 ரன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இலக்கு வைத்தது.
இந்நிலையில், அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து, ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின், சந்தீப் சர்மா, அசிஃப் உள்ளிட்டோர் ஒரு ரன்கூட அடிக்காமல் ஆட்டமிழந்தார். மேலும், சஞ்சு சாம்சன் 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், ஜோ ரூட் 15 பந்துகளுக்கு 10 ரன்களும், தேவ்துட் படிக்கல் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் என்ற நிலையிலும் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் அதிகபட்ச ரன்களாக ஷிம்ரோன் ஹெட்மயர் 19 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், அதிகப்படியான முயற்சியைத் தழுவியும் பெங்களூர் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. அதிலும் 10.3 ஓவரிலேயே எல்லா விக்கெட்டுகளையும் வீழ்த்தி 59 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றியைத் தழுவியது.