ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான கணிப்புகள் அடங்கிய முக்கிய அப்டேட்..!!

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் எல்லாம் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளார்கள். இந்த போட்டியின் பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு உள்ளிட்டவற்றை காண்போம்.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியால் வெற்றி பெற்று அசத்தியது. அதே போல் இந்த தொடரில் புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
போட்டி குறித்த விவரம் :
8 வது லீக் போட்டி : ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & புதன்கிழமை
தேதி : 5 ஏப்ரல் 2023
மைதானம் : பர்சபரா கிரிக்கெட் மைதானம், குவஹாத்தி.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 தொடரை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றியுடன் தொடங்கி உள்ள நிலையில், இந்த வெற்றியை தொடர கட்டாயம் முயற்சிப்பார்கள் என்பதால் இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்பதில் ஐயமில்லை. அதே சமயத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் முன்னணி வீரர்கள் தலைமையில் மிரட்டல் பேட்டிங் மற்றும் பவுலிங் லைன் அப்பை வைத்துள்ளதால் இந்த போட்டியில் இரு அணிகளுக்கு வெற்றிக்கான வாய்ப்பு சம அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் அறிக்கை :
ஐபிஎல் தொடரின் 8 வது லீக் போட்டி நடைபெற உள்ள குவஹாத்தியின் பர்சபரா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்கும் சிறப்பாக உதவும் என்று தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி சேசிங்கை தேர்வு செய்வது சிறந்த முடிவாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது, மேலும் முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 170 ஆக பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் : ஜோஸ் பட்லர்
துணை கேப்டன் : பானுக ராஜபக்ச
பேட்ஸ்மேன்கள் : யஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜிதேஷ் சர்மா, ஷிகர் தவான்.
ஆல்ரவுண்டர்கள் :சிக்கந்தர் ராசா, ஜேசன் ஹோல்டர்
விக்கெட் கீப்பர் : சஞ்சு சாம்சன்
பவுலர்கள் :யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ட்ரெண்ட் போல்ட்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஜோஸ் பட்லர் (வி.கீ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : பிர சிம்ரன் சிங் (வி.கீ), ஷிகர் தவான் (கேப்டன்), பானுக ராஜபக்ச, ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா, சாம் குரான், ஷாருக் கான், நாதன் எல்லிஸ், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.