ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்க உள்ள முன்னணி வீரர்..?? | rr vs pbks 2023 prediction

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் குவஹாத்தியில் உள்ள பர்சபர கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் இம்பாக்ட் பிளேயர் இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றியுடன் தொடங்கி உள்ள நிலையில், இந்த போட்டியில் தங்களின் வெற்றி பயணத்தை தொடர இரு அணிகளும் முழு வீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரட்டல் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் இம்பாக்ட் பிளேயராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் நவ்தீப் சைனி களமிறங்கி பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் போட்டியில் ஏற்படுத்தவில்லை என்பதால், இன்று நடைபெற உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இம்பாக்ட் பிளேயர் இடத்தில் அனுபவ வீரர் சந்தீப் சர்மா களமிறக்கப்பட்ட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறந்த பவுலிங் ரெகார்ட் வைத்துள்ள சந்தீப் சர்மா எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னணி பவுலர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், சந்தீப் சர்மா ராஜஸ்தான் அணி சார்பில் விளையாட ஒப்பந்தம் ஆகி அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற சந்தீப் சர்மா சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி முக்கிய காரணமாக அமைய அதிக வாய்ப்புள்ளது என்பதால் இன்று நடைபெறவுள்ள போட்டியில் சந்தீப் சர்மா இம்பாக்ட் பிளேயராக களத்தில் இறங்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.