இறுதி வரை பரபரப்பாக சென்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கலக்கல்..!! ராஜஸ்தான் ராயல்ஸ் போராட்டம் வீண்..!! | rr vs pbks 2023 highlights

ஐபிஎல் 2023 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் பவுலர்களுக்கு வான வேடிக்கை காட்டினார்கள், குறிப்பாக பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அதேபோல் பவுலிங்கில் கலக்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முடிவு கட்டியது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அளித்த இமாலய இலக்கை அடைய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் உடனுக்குடன் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சியை அளித்தார்கள், குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஓபனிங் பேட்டிங் செய்ய களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 0(4) டக் அவுட் ஆனார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அழுத்தத்தை தரும் அளவிற்கு முன்னணி பவுலர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலையை சரி செய்யும் வகையில் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் பொறுப்புடன் விளையாடினார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் பஞ்சாப் பவுலர் நாதன் எல்லிஸ் பந்தில் 42(25) ரன்கள் பெற்று ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் மீண்டும் தனது அசத்தல் பவுலிங்கை தொடர்ந்த நாதன் எல்லிஸ் ராஜஸ்தான் வீரர்கள் ரியான் பராக் 20(12) மற்றும் படிக்கல் 21(26) விக்கெட்டுகளை கைப்பற்றி அரங்கை அதிர வைத்தார்.
அதன்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கடைசி நம்பிக்கையாக களமிறங்கிய ஹெட்மையர் அதிரடியாக சிக்ஸர்கள் அடித்து போட்டியின் போக்கை மாற்றினார். அதேபோல் மறுமுனையில் இளம் வீரர் துருவ் ஜூரல் பஞ்சாப் பவுலர் அர்ஷ்தீப் சிங் ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.
இதனால் இறுதி ஓவர் வரை போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்ற போட்டியில் ஹெட்மையர் 35(17) ரன்கள் பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார், எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.