ராஜஸ்தான் vs குஜராத் அணிகள் மோதும் போட்டி குறித்த முக்கிய விவரங்கள்..!! ஒரு பார்வை ..!! | rr vs gt 2023 ipl preview
![ராஜஸ்தான் vs குஜராத் அணிகள் மோதும் போட்டி குறித்த முக்கிய விவரங்கள்..!! ஒரு பார்வை ..!! | rr vs gt 2023 ipl preview](https://www.sportspartans.com/assets/uploads/news-2240.jpg)
ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய சவாய் மான்சிங் மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெறும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் அதிரடி ஆட்டத்தை, 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் தலைமையில் அசத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெறும் என்பதால் இரு அணிகள் சார்பில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தொடரில் கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வியை தழுவி உள்ள நிலையில், இந்த போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடி வீரர்கள் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், அஸ்வின் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள், குறிப்பாக அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிரட்டல் பார்மில் உள்ளது அணியின் வெற்றிக்கு மிகவும் உதவும் என்று தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் , முஹம்மது ஷமி , விஜய் ஷங்கர் ஆகியோர் அணிக்கு பக்கபலமாக உள்ளார்கள்.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் சார்பில் ஐபிஎல் அரங்கை அதிர வைக்கும் போட்டி அரங்கேறும் என்று கூறினால் மிகையில்லை. மேலும் ஐபிஎல் 2023 தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை இன்றைய நாள் முடிவில் ராஜஸ்தான் அணி பெறுமா .?? இல்லை குஜராத் அணி தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா..?? என்பதை பொறுத்திருந்து காண்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்/ வி.கீ), தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : விருத்திமான் சாஹா(வி.கீ), அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்.