டாஸ் வென்றது டெல்லி கேபிடல்ஸ்.. இதோ பிளேயிங் லெவன் அப்டேட்.. | IPL 2023 RR vs DC Toss

ஐபிஎல் 2023 தொடரின் 11வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்களை பற்றி பார்க்கலாம்.
டெல்லி கேபிடல்ஸ் அணியை பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பதிவு செய்துள்ளது. தொடரில் இதுவரை இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில், இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தன்வசப்படுத்த முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியையும், ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது. இதையடுத்து பட்டியிலில் 5வது இடத்தில் இருக்கிறது.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார், எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்: டேவிட் வார்னர் (கேப்டன்), மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல் (வி.கீ), அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/வி.கீ), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்